Thursday 18 April 2013

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 8% உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 8% உயர்த்த அமைச்சரவை இன்று (18.04.2013)  ஒப்புதல் வழங்கியது. இதன் படி அகவிலைப்படி 72% - லிருந்து  80% ஆக உயரும்.

Tuesday 16 April 2013

ஆசிரியர் சங்க சிக்கண நாணய கூட்டுறவு சங்க தேர்தல் - வெற்றி

ஆசிரியா் சிக்கன நாணய கூட்டுறவு சங்கத் தோ்தல் 12.04.2013 அன்று நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று (16.04.2013) அன்று வெளியிடப்பட்டன. 

        குழித்துறை சரகம், முன்சிறை சரகம், கருங்கல் சரகம் ஆகியவற்றில் நடந்த தோ்தலில் PSTA அமோக வெற்றி பெற்றது.  ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.....நன்றி......நன்றி.....

17 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தொடக்க கல்வியில் நேரடி நியமனம் மூலம் 350 பட்டதாரி ஆசிரியர்களும், பதவி உயர்வு மூலம் 399 பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். சிறுபான்மை மொழி பட்டதாரி ஆசிரியர்கள் 21 பேர் நியமிக்கப்படுகிறார்கள். இடை நிலை ஆசிரியர்கள் 3ஆயிரத்து 433 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.


பள்ளிக்கல்வி இயக்குனரகம் மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் 5,081 பேர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மேலும் 260 தையல் ஆசிரியர்களும் 4 இசை ஆசிரியர்களும், 888 உடற்கல்வி ஆசிரியர்களும் நியமிக்கப்படுகிறார்கள். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2494 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.


மாநகராட்சி பள்ளிகளில்பட்டதாரி, முதுகலை பட்டதாரி, உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட அனைத்து தரப்பு ஆசிரியர்களாக 232 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.


இவை அனைத்தும் கடந்த ஆண்டில் நிரப்பப்படவேண்டியவை. மொத்தத்தில் 16ஆயிரத்து 400 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.


இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா வெளியிட்டுள்ளார்.

Sunday 3 March 2013

11 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு விரைவில் புதிய கட்டணம்

"வரும் மே மாதத்துடன், பழைய கல்வி கட்டணம் முடிவுக்கு வரும் நிலையில், 11,626 தனியார் பள்ளிகளுக்கு, ஆகஸ்ட் 26ம் தேதிக்குள், அடுத்த மூன்று கல்வி ஆண்டுகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும்" என, கட்டண நிர்ணயக் குழு தலைவர் சிங்காரவேலு தெரிவித்தார்.

அவர், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கட்டண நிர்ணயக் குழுவின் முதல் தலைவர், கோவிந்தராஜன் நிர்ணயித்த, கட்டண காலக்கெடு, 11,626 பள்ளிகளுக்கு, வரும் மே மாதத்துடன் முடிகிறது. இதனால், அந்த பள்ளிகளுக்கு, அடுத்த மூன்று கல்வி ஆண்டுகளுக்கும் சேர்த்து, புதிய கட்டணங்களை நிர்ணயிக்க, நடவடிக்கை எடுத்துள்ளோம்.

முதலில், கட்டண நிர்ணயிப்பில் இருந்து விடுபட்ட, 910 பள்ளிகளுக்கு, கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, விசாரணை துவங்கி உள்ளது. தினமும், 100 பள்ளிகளிடம் விசாரணை நடக்கும். இந்த விசாரணை, மூன்று வாரங்களுக்கு நடக்கும். அதன் பின், 11 ஆயிரம் பள்ளிகள் மீதான விசாரணை நடக்கும். 

அனைத்துப் பள்ளிகளுக்கும், ஆகஸ்ட் 26ம் தேதிக்குள், புதிய கட்டணங்களை நிர்ணயித்து விடுவோம். பள்ளிகளுக்கு, 7 முதல், 10 சதவீதம் வரை, கட்டணங்களை உயர்த்தலாம் என, சென்னை ஐகோர்ட் தெரிவித்து உள்ளது. இதற்கு, ஒரு மதிப்பீட்டை தயாரித்து, அதனடிப்படையில், கட்டணங்களை உயர்த்தலாம் எனவும், ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

எனவே, பள்ளிகளின் ஒட்டு மொத்த தரத்தின் அடிப்படையில், கிரேடு வகைப்படுத்தி, கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு சிங்காரவேலு கூறினார்.

Wednesday 27 February 2013

தமிழக அமைச்சரவை மாற்றம் , புதிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு.வைகைச்செல்வன்

தமிழக அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த திருமதி.கோகுல இந்திரா, பள்ளி கல்வி, இளைஞர் நலன் சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சராக இருந்த திரு.என்.ஆர்.சிவபதி, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் திரு.கே.எஸ்.விஜய் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில், திருமதி. டி.பி.பூனாட்சி, டாக்டர் திரு.வைகைச்செல்வன், திரு.கே.சி.வீரமணி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள டி.பி.பூனாட்சிக்கு கதர் மற்றும் கிராமத் தொழில்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கே.சி.வீரமணிக்கு சுகாதாரத்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வைகைச்செல்வன் பள்ளி கல்வித்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பி.செந்தூர்பாண்டியன் சுற்றுலாத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி. முனுசாமியிடம் கூடுதலாக சட்டம், நீதிமன்றம், சிறைத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புஇலாகா ஒப்படைக்கப்பட்டுள்ளது

புதிய அமைச்சர்கள் நாளை (28.02.2013) காலை 11 மணியளவில் கவர்னர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவியேற்றுக்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பட்டங்கள் - வேலை நோக்கத்திற்காக இளநிலை பட்டதாரி பட்டமாக ஏற்றுக்கொள்ள அரசாணை வெளியீடு

CLICK HERE TO DOWNLOAD

செப்., 30 தேதி அரசு விடுமுறை ரத்து செய்து அரசு உத்தரவு

வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிப்பதற்காக, செப்., 30ம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறை, ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.


ஆண்டு தோறும், பண்டிகைகள், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களுக்கு, அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதில், ஆண்டு தோறும், செப்., 30ம் தேதி, வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிவதால், வர்த்தக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த விடுமுறையை, அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டாம் என, மத்திய அரசின் நிதித்துறை, மாநில அரசுகளுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தது.இதை ஏற்று, வங்கிகளின் அரையாண்டு கணக்கு முடிப்பிற்காக, அறிவிக்கப்பட்ட, செப்., 30ம் தேதியை, அரசு விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கி, விடுமுறையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Friday 8 February 2013

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தமிழக அரசின் ஆய்வில் உள்ளதாக சட்டசபையில் அமைச்சர் தகவல்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தால் அவர்களுக்கு எந்த பலனும் இல்லை என கூறுகின்றனர். இந்த திட்டம் இரத்து செய்யப்படும் என ஏற்கனவே அதிமுக வாக்குறுதி அளித்துள்ளதையும் அரசு ஊழியர், ஆசிரியர் சுட்டிக்காட்டுகின்றனர்.

சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத பணம் எங்கே போகிறது என்றும் அவர்களுக்கு தெரியவில்லை. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள திட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என எழுப்பட்ட கேள்விக்கு மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் கீழ்வரும் பதிலளித்துள்ளார். 

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் அமலில் உள்ளது. எனினும் இத்திட்டம் தமிழக அரசின் ஆய்வில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

Thursday 1 November 2012

பண்டிகை முன்பணம் ரூபாய் .2000 லிருந்து ரூபாய்.5000 உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூபாய் .2000 லிருந்து ரூபாய்.5000 உயர்த்தி தமிழக முதல்வர் இன்று(01/11/12) பேரவையில் அறிவிப்பு.

Wednesday 19 September 2012

கட்டாய கல்வி சட்டம்: ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி

கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு, செப்டம்பர் 27 முதல், மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

   கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து, 2013 மார்ச் மாதத்திற்குள், அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது. இம்மாதம் 27ம் தேதி, வட்டார வள மைய அளவில், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், 28ம் தேதி தொடக்க நிலை ஆசிரியர்களுக்கும், 29ம் தேதி நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பயிற்சி அளிக்கப்படுகிறது. 

   தமிழக கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன வழிகாட்டுதல் படி, அனைவருக்கும் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.

Passport NOC

கடவு சீட்டு(Passport NOC) பெற தடை இல்லா சான்று கோரும் போது ஆசிரியர்களின் வங்கி கணக்கு புத்தக நகல்,காவல் துறை சான்று, இரு ஆசிரியர்களின் பிணை முறிவு சான்று போன்றவைகள் இணைக்கப்படவேண்டிய அவசியம் இல்லை. படிவம் 1,2,3 மட்டும் இணைத்தால் போதுமானது - பள்ளி கல்வி இயக்குனர் 

CLICK HERE TO DOWNLOAD PROCEEDING

40% Physically Challenged? No profession tax from 01.10.2012

From October 1, persons living with 40 per cent disability in Tamil Nadu would be exempted from paying profession tax.

“The Tamil Nadu Municipal Laws (Third Amendment) Act, 2012, which provides for the exemption will come into force from October 1. We have also suitably amended the respective Municipal Corporation Acts of Chennai, Madurai and Coimbatore to give effect to this privilege for disabled employees and traders,” a Municipal Administration and Water Supply Department official said.

“At present, differently-abled persons with total disability in one or both hands or legs, spastics, totally speech-impaired or hearing-impaired persons or totally visually-impaired persons alone are exempted from the payment of profession tax, as per the provisions of the Urban Local Bodies Acts. In the absence of specific definition of disability in the said Acts, all the differently-abled persons are not in a position to avail the said benefit,” an official quoting the TN Municipal Laws (Third Amendment) Bill said.

According to the official, the Act had to be amended as the present law was ambiguous on exempting differently abled from paying the half-yearly profession tax. Now, “persons with disability, suffering from not less than 40 per cent of such disability, as certified by a Medical Practitioner in service of the Government not below the rank of Civil Surgeon, shall be exempt from profession tax,” he added.

20-09-2012 அன்று அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும்

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 015224/கே2/2012, நாள்: 18-09-2012ன் படி 20-09-2012 வியாழன் அன்று அனைத்துப் பள்ளிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய நிர்ணயம்

Student Smart Card Form 2012-13 for STD 1 to 8

அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி 6872 பட்டதாரி ஆசிரியர் கூடுதல் பணியிடங்களுக்கான பாட வாரியாக அனுமதிக்கப்பட வேண்டிய பள்ளிகளின் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கி தமிழக அரசு அரசாணை 229 வெளியீடு

6,000 கூடுதல் ஆசிரியர் இடங்களுக்கு அனுமதி

காலிப் பணியிடங்கள் மற்றும் மாணவ, மாணவியரின் அதிக எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், கூடுதலாக, 6,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

   இதற்கான அரசாணை, நேற்று முன்தினம் வெளியாகி உள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

   கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு பாடங்களில், இந்தக் கூடுதல் ஆசிரியர் நியமிக்கப்படுவர். ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில், 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியரைத் தேர்வு செய்ய உள்ளது. அப்போது, இந்தக் கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படும் எனத் தெரிகிறது.

மேலும் 3 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிகல்வி துறை அமைச்சர் -சிவபதி

திருச்சியில் நடந்த முதுகலை ஆசிரியர் நியமனத்திற்கான நியமன கலந்தாய்வு நடந்தது. இதில் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் பதிவு மூப்பு அடிப்படையில் மாநில அளவில் 1080 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான 


    பணிஇடங்களுக்கான நியமனத்திற்கான கலந்தாய்வு நடந்தது. இதில்‌ நேற்று 397 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இன்று திருச்சியில் முன்முறையாக ஆன்லைன் வாயிலாக அந்தந்த மாவட்டங்களுக்கான இடங்களுக்கு 683 பேர் உத்தரவு பெற்றனர். இதற்கான பணிநியமன ஆணையினை அமைச்சர் சிவபதி , வழங்கினார். 

   இந்நிகழ்ச்சியில் பள்ளிகல்வித்துறை இயக்குனர் தேவராஜன், துணை இயக்கனர் உமா உள்ளிட்டார் கலந்து கொண்டனர்.பின்னர் அமைச்சர் சிவபதி பேசுகையில், ‌உத்தரவு பெற்ற ஆசிரியர்கள் 100 சதவீதி தேர்ச்சி பெறும் வகையில் மாணவர்களை உருவாக்க வேண்டும். மேலும் 3 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டுகளில் 59 ஆயிரம் பணியிடங்களில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு நியமனம் செய்யப்பட்டனர். இதற்காக ரூ. 15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது என்றார்

தரமான கல்வி வேண்டும்: சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்

என்ன விலை கொடுத்தாவது குழந்தைகளுக்கு தரமான கல்வியை , தனியார் மற்றும் அரசுப்பள்ளிகள் கட்டாயம் அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கண்டிப்பான உத்தரவினை பிறப்பித்துள்ளது. ஜனநாயகத்தின் வாழ்க்கை முறையே தரமான கல்வியில் தான் உள்ளது. புதிய அறிவு தேடலும், ஒழுக்கமும் உள்ளது தரமான சிறந்த கல்வியில் தான் எனவும் கூறியுள்ளது.
   இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி.எஸ். சவுகான், எப். எம். இப்ராஹிம் ஆகியோர் வெளியிட்டிருப்பதாவது: தனியார் மற்றும் அரசுப்பள்ளிகளில் தரமான கல்வியை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தகுந்தாற் போன்று தகுதியும், திறமையும் உள்ள ஆசிரியர்களை நியமிப்பதில் அரசு முழு கவனத்துடன் செயல்பட வேண்டும். அந்த வகையில் அரசு என்ன விலை கொடுத்தாவது தரமான கல்வியை அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஜனநாயகத்தின் வாழ்க்கை முறையே தரமான கல்வியில் தான் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசாணை 216ன் படி பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளனரா ? விவரம் கோரி மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

முதுகலை ஆசிரியர் நியமனம்: 396 பேருக்கு உத்தரவு

மாநிலம் முழுவதும் நேற்று நடந்த முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில், 396 பேர், உத்தரவுகளை பெற்றனர்.

  மாநில பதிவு மூப்பு அடிப்படையில், 1,080 முதுகலை ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, "ஆன்-லைன்' வழியாக, மாவட்ட தலைநகரங்களில் உள்ள சி.இ.ஓ., அலுவலகங்களில் நேற்று நடந்தன.

  சென்னை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், காலிப் பணியிடங்கள் இல்லை. இதர, 29 மாவட்ட தலைநகரங்களில், கலந்தாய்வு நடந்தது.

  முதல் நாளான நேற்று, அந்தந்த மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், 396 பேர், பணி நியமன உத்தரவுகளை பெற்றதாக, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.

   ஒரு மாவட்டத்தில் இருந்து, வேறு மாவட்டத்தில் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு, திருச்சியில் இன்று நடக்கிறது. நியமன உத்தரவு பெறும், 1,080 பேரும், இம்மாதமே பணியில் சேர வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மாணவர்களுக்கு செப்டம்பர் 21ல் திறனறிதல் தேர்வு

தனியார் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு, வரும் 21ம் தேதி திறனறிதல் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

   தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் ஆங்கில வழி கல்வி கற்பிக்கும் பள்ளிகளில், தற்போது அரசுப் பள்ளிகளைப் போல், 9, 10 வகுப்பு மாணவர்களுக்கும் திறனறிதல் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்வு கொள்குறி வகையில் (அப்ஜெக்டிவ் டைப்) இருக்கும். 

  தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களில், ஆசிரியர்கள் நடத்திய பாடத்தில் இருந்து, மிகவும் அடிப்படையான கேள்விகள் இருக்கும். இம்மாதம் 21ம் தேதி தேர்வு நடக்கிறது. இதனடிப்படையில், கற்பித்தில் திறனை மேம்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

Thursday 13 September 2012

03.10.2012 அன்று TET மறுதேர்வு நடைபெறுவதால் அனைத்து வகை கல்வி நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அறிவித்தும், 20.10.2012 அன்று ஈடு செய் வேலை நாளாக அறிவித்தும் - அரசு ஆணை 218 வெளியீடு

TET - மறுதேர்வு புதிய எண் மற்றும் தேர்வு எழுதும் இடம் அறிய

TET

ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தான் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பணிக்கு தேர்வு செய்ய அதிகாரப்பூர்வமான அமைப்பு, ஆனால் இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரும் வரை தற்போதுள்ள மாநில பதிவு மூப்பு முறை செயல்ப்படுத்துதல் மற்றும் மாணவர் நலன் கருதி 12.07.2012 TET தேர்வில் தவறியவர்களுக்கும் மறுதேர்வு அக்டோபர் மாதத்திற்குள் நடத்த அரசாணை 222 வெளியீடு 

CLICK HERE TO DOWNLOAD GO.NO. 222 

Wednesday 12 September 2012

(டி.இ.டி.,) சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வராதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

மதுரையில் தென் மாவட்டங்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்காக நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் 11 பேர் "ஆப்சென்ட்" ஆயினர்.

  மதுரை உட்பட 9 மாவட்டங்களில், ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி மதுரையில் நடந்தது. ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் சேதுராம வர்மா தலைமை வகித்தார். மதுரை சி.இ.ஓ., நாகராஜ முருகன் உட்பட அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.

   9 மாவட்டங்களில் இருந்தும் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பங்கேற்றனர்.சேதுராம வர்மா கூறுகையில், "மதுரையில் 2 நாட்கள் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் 544 பேர் பங்கேற்றனர். 11 பேர் "ஆப்சென்ட்" ஆகியுள்ளனர். "ஆப்சென்ட்" ஆனவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும்,&'&' என்றார்.

சான்றிதழில் குளறுபடி தேர்ச்சி பெற்றும் சிக்கல்

ஆசிரியர் தகுதித் தேர்வில், முதல் மற்றும் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களில், 100 பேருக்கு சிக்கல் எழுந்துள்ளது. தேர்ச்சி பெற்றாலும், உரிய கல்விச் சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் சரியாக இல்லை.

      ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) முதல் தாளில், 1,735 பேர், இரண்டாம் தாள் தேர்வில், 713 பேர் என, 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, 7, 8ம் தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதன்பின் நடத்திய ஆய்வில், இரு தேர்வுகளிலும் சேர்த்து, 50 பேருக்கு, உரிய தகுதிகள் இல்லை என்பது, கண்டறியப் பட்டுள்ளது. சான்றிதழ்கள் இல்லாதது, தேர்வுக்குரிய தகுதியில் பட்டம் பெறாமல், வேறு பாடங்களில் பட்டம் பெற்றிருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்த 50 பேரும், தேர்ச்சிப் பட்டியலில் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளனர். மேலும், 50 முதல், 75 பேரின் கல்விச் சான்றிதழ்கள் குறித்தும், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) ஆய்வு செய்து, இறுதி முடிவை எடுக்கும் என, துறை வட்டாரம் தெரிவித்தது.
    பல தேர்வர்கள், வெளி மாநிலங்களில் உள்ள பல்கலையில் படித்துள்ளனர். அந்த பட்டங்கள், தமிழகத்தின் கல்வித் தகுதிக்கு நிகரானது தானா என்பதை, உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளுக்குப் பின், இறுதி தேர்வுப் பட்டியல், 20ம் தேதிக்குப் பின் வெளியாகும் என, கூறப்படுகிறது.

ஆசிரியர் பணி: மன நிறைவா? மன உளைச்சலா?

மாறிவரும் கல்விச்சூழலில் தங்களது பணியில் எதிர்கொள்கிற சவால்கள், பிரச்சினைகள் குறித்து மனம் திறந்து பேசுகின்றனர் ஆசிரியர் தினம் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகள் தொடர்ச்சியாக மாறிவருகின்றன. கால மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்களின் சிந்தனைப் போக்கிலும் பெரும் மாற்றம் காணப்படுகிறது. இப்படியான கல்விச்சூழலில், கல்வித்தேரை இழுத்துச் செல்லும் ஆசிரியர்களின் மனநிலை எப்படி இருக்கிறது? அவர்கள் சந்திக்கிற சவால்கள், பிரச்சினைகள் என்ன? ஆசான் என்கிற மகத்துவம் மிகுந்த பணியை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? இதுகுறித்து சில ஆசிரியர்களிடம் பேசினோம்...
     கல்விச்சூழலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களால் ஆசிரியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.  
   "தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு (Continuous and Comprehensive Evaluation) என்று புதிய முறை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த முறையில், மாணவர்களுக்கு யோகாசனம், பாட்டு, நன்னெறி உட்பட பல திறமைகளையும் கற்றுத்தர வேண்டும். நல்ல விஷயம்தான். நிச்சயம் வரவேற்கக்கூடியதுதான். ஆனால், அது பற்றிய பதிவேடுகளை ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டும். கல்வி அதிகாரிகள் திடீர் திடீரென புள்ளிவிவரங்களைக் கேட்கின்றனர். பாடம் நடத்துவதைக் காட்டிலும், பதிவேடுகளைப் பராமரிப்பதுதான் ஆசிரியர் பணி என்றாகிவிட்டது. வாரத்தில் ஒரு நாள் பாடம் நடத்துவதே பெரிய விஷயம் என்ற நிலைதான் இப்போது உள்ளது" என்று ஆதங்கப்படுகிறார், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் கண்ணன்.
     கல்வித்துறையில் பல்வேறு நோக்கங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, உரிய முறையில் திட்டமிட்டு செலவிடப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்படுவதும் ஆசிரியர்கள்தான். எப்படி? "மாவட்டக் கல்வி அதிகாரியிடம் இருந்து எங்களுக்கு திடீரென எஸ்.எம்.எஸ். வரும். இன்று பிற்பகல் 3 மணிக்குள் பதிவேடுகளுடன் வரவேண்டும் என்று அதில் இருக்கும்.நான் ஒரு குக்கிராமப் பள்ளியில் பணியாற்றுகிறேன். 12 மணிக்கு கிளம்பினால்தான் 3 மணிக்குள் அங்கு போய்ச்சேர முடியும். மாதத்தில் பாதிநாள் இப்படி அலைந்து கொண்டிருந்தால் எப்படி என்னால் பள்ளியைக் கவனிக்க முடியும்? அந்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை ஒழுங்காகச் செலவிடாமல், அதை வருஷக் கடைசியில் எப்படியாவது செலவழித்தாக வேண்டும் என்ற நெருக்கடி அவர்களுக்கு. பிப்ரவரி, மார்ச் வந்து விட்டால் டிரெயினிங் டிரெயினிங் என்று எங்களை வாட்டி வதைக்கிறார்கள்" என்று புலம்புகிறார், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர். கல்வி போதிப்பது மட்டுமே ஆசிரியர்களின் பணி.  ஆனால் இப்போது கல்விக்கு சம்பந்தமில்லாத பொறுப்புகளும் ஆசிரியர்களின் தலையில் சுமத்தப் படுவதாகக் குற்றச்சாட்டு எழுகிறது. "சர்வ சிக்ச அபியான் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்குகிறது. அந்த நிதியில் புதிதாக ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்றால், அந்தக் கட்டுமானப் பணிக்கான முழுப்பொறுப்பும் தலைமையாசிரியர்தான். கட்டுமானப் பொருட்கள் வாங்குவது, பணிகளை மேற்பார்வையிடுவது, கணக்கு வழக்கு பார்ப்பது உட்பட எல்லா வேலைகளையும் தலைமையாசிரியர் செய்ய வேண்டும். அதுதவிர, கட்டிங் கொடு என்று அரசியல்வாதிகள்  வந்துவிடுகின்றனர். இதுபோன்ற சூழலில், தலைமை ஆசிரியரால் பள்ளிக்கூடத்தை எப்படி நிர்வகிக்க முடியும்? தேவையில்லாத மனஉளைச்சலுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது" என்று பொருமுகிறார், மதுரையைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட தலைமையாசிரியர் ஒருவர். சினிமா, தொலைக்காட்சியின் தவறான கலாச்சாரத் தாக்கத்திற்கு ஆளாகியிருக்கும் மாணவர்களை சமாளிப்பது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. சமீபத்தில் வாடிப்பட்டி அருகே பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளியில் இருந்த பெஞ்ச்சைத் திருடி விற்று, அதில் மது வாங்கிக்  குடித்தனர் என்று ஓர் செய்தி வெளியானது. வகுப்பறைகளில் அம்மாதிரியான மாணவர்களைக் கையாளுவது ஆசிரியர்களுக்குபெரிய சவால்தான். "இப்போது கேமரா செல்போன், பள்ளி மாணவர்களிடம் சர்வசாதாரணமாகப் புழங்குகிறது. அது அவர்களை மிகத் தவறான பாதையில் இழுத்துச் செல்கிறது. ஒழுக்கம், ஆசிரியர்களுக்கு கீழ்படிதல் போன்ற பண்புகள் பொதுவாக இன்றைக்கு மாணவர்களிடம் அருகிவிட்டன. ஆசிரியர்களின் அறிவுரைகளை அவர்கள் மதிப்பதில்லை. ஆனால், மாணவர்களைத் திட்டாதீர்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் எங்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள். இதுபோன்ற மாணவர்களை எப்படிச் சமாளிப்பது, அவர்களுக்கு எப்படிப் பாடம் சொல்லித் தருவது என்று எங்களுக்குப்         புரியவேயில்லை" என்று வருத்தப்படுகிறார்,                       

      சத்தியமங்கலத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி தமிழாசிரியர் கல்யாணசுந்தரம். இவ்வளவு சவால்களுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்போடும், திறமையோடும் பணியாற்றி சிறந்த மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிலரைத் தேர்வு செய்து நல்லாசிரியர் விருது வழங்குகிறது நம் அரசு. ஆனால், நல்லாசிரியர் என்ற விருதுகளை எதிர்பாராமலேயே, எத்தனையோ ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு கல்விச் சேவையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வப்போது, அப்படிப்பட்ட பெருமைக்குரிய ஆசிரியர்கள் பலரின் சிறப்புகளை வெளியிட்டு நமது ‘புதிய தலைமுறை’யும் கௌரவித்து வருகிறது.

ஆசிரியர் விருதில் ஏற்படும் சர்ச்சைகளை தவிர்க்க புது திட்டம் : அடுத்த ஆண்டு முதல் அமலாகும்

""ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியரின் சாதனைகளை, வரும் ஆண்டுகளில் வெளிப்படையாக்க, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும், பாடத்தில் சிறப்பாக செயல்படுவதுடன், பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபடும் சிறந்த ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு, தமிழக அரசு சார்பில், 370 பேருக்கு, ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. குற்றச்சாட்டு : ஆளுங்கட்சி பிரமுகர்கள் பலரும், விருதுக்கு பரிந்துரை செய்கின்றனர்.
    இதனால், விருதுக்குரிய ஆசிரியரை தேர்வு செய்யும் முறை குறித்து, சர்ச்சை எழுந்து உள்ளது. திறமையான ஆசிரியரை தேர்வு செய்வதில் உள்ள விதிமுறைகளை, தேர்வு செய்யப்படும் அனைத்து ஆசிரியருக்கும் பார்ப்பது கிடையாது என்றும், வேண்டப்பட்ட ஆசிரியராக இருந்தால், எவ்வித விதிமுறைகளையும் பார்க்காமல், கடைசி நேரத்தில் பட்டியலில் சேர்க்கப்படுவதாகவும், ஆசிரியர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
வெளிப்படை தன்மை : நடப்பாண்டில், 80 சதவீத ஆசிரியர், முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், 20 சதவீத ஆசிரியர், விதிமுறைப்படி தேர்வு செய்யப்படவில்லை. தகுதியற்றவர்களுக்கு, சிபாரிசுகளின் அடிப்படையில், விருதுகளை கொடுத்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ராதா கிருஷ்ணன் பெயரில் அமைந்த விருதை, தகுதியான ஆசிரியருக்கு மட்டுமே வழங்க வேண்டும். விருதுக்குரிய ஆசிரியர் செய்த சாதனைகளை, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை, வெளிப்படையாக வெளியிட வேண்டும்.
        வரும் ஆண்டுகளில்... : ஆசிரியர் விருது பெற்றவர் குறித்த புத்தகத்தில், ஆசிரியர் செய்த சாதனைகள் குறித்து, ஒரு தகவலும் இல்லை; வெறும், பெயர், பள்ளி ஆகிய விவரங்கள் மட்டுமே உள்ளன. இதனால், விருது பெற்ற ஆசிரியரின் சாதனைகளை, அனைவரும் அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. ஆசிரியரின் செயல்பாடுகளை, புத்தகத்திலும், இணையதளத்திலும் வெளியிடலாம். விருதுக்கு, விண்ணப்பங்களை வரவேற்பது குறித்த அறிவிப்பையும், ஆசிரியருக்கான தகுதிகள், விதிமுறைகள் குறித்த தகவலையும், முன்கூட்டியே நாளிதழ்களில் வெளியிட வேண்டும் என்பதும், ஆசிரியரின் எதிர்பார்ப்பாக உள்ளது. சங்க நிர்வாகிகள், ஆசிரியர்களின் கருத்துகள் குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜனிடம் கேட்டபோது,
    ""தகுதியான ஆசிரியர்களுக்குத் தான், விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. விருது பெறும் ஆசிரியரின் சாதனைகளை, புத்தகத்தில் வெளியிடுவதில், எந்த பிரச்னையும் இல்லை. வரும் ஆண்டுகளில், ஆசிரியர் சாதனைகள், புத்தகங்களில் வெளிப்படையாக வெளியிடப்படும்,'' என்றார்.

Tuesday 11 September 2012

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த தற்போதைய உண்மை நிலை

    CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நாடு முழுவதும் 1.1.2004 முதல் செயல்படுத்தப்பட்டு தற்பொழுது 3 மாநிலங்கள்  (கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா) தவிர மற்ற மாநிலங்களில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் கேரளாவில் வரும் 1.4.2013 முதல்பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என அறிமுகப் படுத்தப்பட  இருக்கிறது.

   இந்நிலையில் இத்திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு கட்டமாக போராட்டங்கள் பல்வேறு சங்கங்களால் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மசோதாவை சட்டமாக்கப்பட்டு நிறைவேற்றியே தீர வேண்டும் என்று மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

    தற்பொழுது  பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பாதிப்புகள் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளது. அது என்னவென்றால் இத்திட்டத்தின் மூலம் ஓய்வுப்பெற்ற ஊழியர் அல்லது மரணமடைந்த ஊழியரின் குடும்பங்களுக்கு இதுவரை இத்திட்டத்தினால் பிடித்தம் செய்த சந்தா பணம், அரசின் பங்குத் தொகை மற்றும் எந்தவித ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்பது  தான் அந்த அதிர்ச்சியான தகவல். இத்திட்டத்தின் தீவிரத்தை அறிந்த சிலர் இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் இதை திசை மாற்றும் விதமாக 30.08.2012 அன்றைய ஒரு பத்திரிகை செய்தியில் அரசு அலுவலர் கழகத்தின் சி மற்றும் டி பிரிவின் தலைவர் திரு. சவுந்திரராஜன் தலைமையில் நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து பேசி உள்ளனர் என்றும், முதல்வர் உங்களுக்கு இனிப்பான செய்தி வரும் என கூறியுள்ளார் என்றும், பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வருவது தான் அந்த இனிப்பான செய்தி என்கின்றனர் அந்த ஊழியர் சங்க நிர்வாகிகள்.

   இதுகுறித்து ஆசிரியர் சங்க மாநில அளவிலான நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இனிப்பான செய்தி வரும் என்று கூறியுள்ளாரே தவிர CPSஐ விலக்கி கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும் என கூறவில்லை என்றும் மேலும் CPSன் தற்பொழுது நிலை குறித்து விரிவான விவரங்களை அளித்தார்.

28.03.2012 அன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில்  வழக்கு எண். WP (MD). 3802 / 2012 CPSக்கு எதிராக தொடக்கப்பட்டு அந்த வழக்கு விசாரணைக்கும் எடுத்து கொள்ளப்பட்டு அரசு இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்கமாறு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. ஆனால் 5 மாதங்கள் ஆகியும் இன்று வரை அரசின் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றும், ஆனால் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை நீக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் ஊதிய முரண்பாடுகள் களையும் குழுவின் தலைவரான அரசு செயலாளரிடமிருந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு அம்மனுவில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் குறித்த கோரிக்கைகளை பரிசீலித்து அரசிடம் பரிந்துரைகளை அளிப்போம் என்று உறுதி அளித்துள்ளார் என்று சுட்டிக்காட்டுகிறார்.

நிலைமை இவ்வாறு இருக்க அரசு, அரசு துறையிடமிருந்து அறிவிப்போ அல்லது எவ்வித பதிலும் வராத நிலையில், நிர்வாகிகளின் இச்செய்தி  தன்னிச்சையாக விளம்பரத்திற்காக அளிக்கப்பட்டதாகவே நாங்கள் கருதுகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் ஒரு ஆசிரியராக 7 வருடம் பணிபுரிந்து தற்பொழுது எந்தவித ஓய்வூதியம் பெறாமல் மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தில் (100 நாள் வேலை) தினக் கூலி அடிப்படையில் வேலை செய்து வருகிறார். அவரும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் W.P.(MD). 10178 / 2012 வழக்கு தொடுத்துள்ளார், அந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் மேலும் அவர் தெரிவித்தார். எனவே பங்களிப்பு ஓய்வூதியம் திட்டம் குறித்து எந்தவித பொய் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

Sunday 9 September 2012

Results of Departmental Examinations - MAY 2012 (Updated on 06 September 2012)

விண்வெளியின் திட்டத்தில் இந்தியா சதம் ; இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: PSLV-21 C - பிரதமர் பங்கேற்பு

இந்திய திருநாட்டின் அறிவியல் முன்னேற்றத்தின் உச்சிக்கு சென்று இருக்கின்றோம் என்பதை பறைசாற்றும் விதமாக இஸ்ரோவின் ராக்கெட் மற்றும் செயற்கை கோள் உள்பட இன்று 100 வது திட்டத்தை வெற்றிகரமாக இந்தியா செயல்படுத்துகிறது. .இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் மூத்த அறிவியல் விஞ்ஞானிகள் ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவு தளத்தில் குவிந்திருக்கின்றனர். 100 வது செயற்கை கோள் என்பதால் பிரதமர் இந்த நிகழ்ச்சியில் நேரிடையாக பங்கேற்றுள்ளார்.

  இதற்கான கவுன்டவுன் நேற்று முன்தினம் துவங்கியது. இன்று காலை 9. 51 க்கு விண்ணில் செலுத்தப்பட்டது. வெற்றிகரமாக சீறிப்பாய்ந்த செயற்கைகோள் சுமந்து செல்லும் ராக்கெட் சரியான பாதை ‌நோக்கி செல்கிறது.

இந்தியாவின் அறிவியலில் மைல்கல்:

இந்திய அறிவியல் தொழில் நுட்பத்துறையின் மைல்கல்லாக 100-வது செயற்கை கோள் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோவின் இயக்குனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: கடந்த 1975-ம் ஆண்டு இந்தியாவின் சார்பில் செலுத்தப்பட்ட ஆர்யபட்டா செயற்கைகோள் முதற்கொண்டு இதுவரை ராக்கெட் மற்றும் செயற்கை கோள் என மொத்தம் 99 எண்ணம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இன்று அனுப்பும் திட்டம் 100 வது திட்டமாகும்.

வர்த்தக ரீதியில் செயல்பாடு :

தற்போது பி.எஸ்.எல்.வி.சி-21 என்ற செயற்கைகோள் மூலம் வர்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த செயற்கைகோளில் ஜப்பான் நாட்டை சேர்ந்த சிறிய வகை செயற்கைகோளும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஸ்பாட் -6 என்ற 750 கிலோ எடை கொண்ட செயற்கைகோளும் அனுப்பப்படுகிறது. இது இன்று வெற்றிகரமாக செலுத்தப்படும். இந்தியாவின் செயற்கைகோள் ஆராய்ச்சி மையத்திற்கு ஒரு மைல் என்றார் பெருமிதத்துடன்.

இதுவரை 37ர ராக்கெட்டுகளையும், 62 செயற்கைகோளையும் இந்தியா அனுப்பி இருக்கிறது.

பிரதமர் கைத்தட்டி மகிழ்ந்தார்

: இன்றைய நிகழ்‌ச்சியை நேரிடையாக பார்க்க வந்திருந்த பிரதமர் , ராக்கெட் விண்ணில் செலுத்தும்போது மிக உன்னிப்புடன் கவனித்து கொண்டிருந்தார். விண்ணில் சென்றபோது பிரதமர் கைத்தட்டி விஞ்ஞானிகளுடன் மகிழ்ந்தார்.

உலக அளவில் பெருமை:

இன்றைய செயற்கைகோள் ஏவப்பட்டிருப்பது உலக அளவில் நமக்கு பெருமை அளிக்கிறது. இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகளும் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த திட்டத்திற்கு அனைவரையும் பாராட்டுகிறேன். வரலாற்று சாதனையின் இஸ்ரோவின் இந்த முயற்சி இந்திய அறிவியல் தொழில்நுட்பத்திற்கு இது ஒரு மைல்கல் ஆகும்.

பள்ளி, கல்லூரி பஸ் டிரைவர்களுக்கு "செக்': கண் பரிசோதனை அவசியம் என, அரசு உத்தரவு

"தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி வாகன டிரைவர்களுக்கு, அரசு மருத்துவமனையில், போக்குவரத்து அலுவலர்கள் முன்னிலையில், கண் பரிசோதனை செய்து, சான்று பெற வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளில், மாணவ, மாணவியரை ஏற்றிச் செல்வதற்கு, பஸ், மினி பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்துகின்றனர். மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. "பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு நிலை குறித்து, சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர், போலீசார், வருவாய் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். மேலும், பள்ளி வாகனங்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ஒரு கமிட்டி அமைக்கப்படும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

   தற்போது, "பள்ளி, கல்லூரி வாகன டிரைவர்கள், கண் மற்றும் உடல் நிலை குறித்து, அரசு மருத்துவமனையில், "சான்று' பெற வேண்டும். கண் பார்வை குறைபாடு, கண் பாதிப்பு உள்ளவர்களை, டிரைவர் பணியில் அமர்த்தக் கூடாது' என, புது நிபந்தனை விதித்துள்ளது. பத்து ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்களை, பள்ளி வாகன டிரைவர்களாகவும், டிரைவர்கள் மற்றும் உதவியாளர்கள், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவன அடையாள அட்டை அணிந்தும், மிதமான வேகத்தில் வாகனத்தை இயக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

   இது குறித்து, வட்டார போக்குவரத்து அலுவலர் ஒருவர் கூறியதாவது: பள்ளி, கல்லூரி வாகனங்களில், மாணவர்களை ஏற்றிச் செல்லும்போது, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதில், மாணவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். பள்ளி வாகனங்களை ஒழுங்குபடுத்தும் வகையில், டிரைவர்களுக்கு கண் பரிசோதனை செய்து, சான்று வழங்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், 11 போக்குவரத்து மண்டலங்கள், 66 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 50 மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகங்கள் உள்ளன. இதில், மண்டல போக்குவரத்து இணை ஆணையர் தலைமையிலான, வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர், பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு நிலை குறித்து, அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு, ஆய்வு மேற்கொள்ளும்போது, விதிமுறைகளை மீறி இருந்தால், வழக்கு பதிவு செய்து, அபராதம் விதிக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரீபெய்டு செல்போனுக்கு ஐஎஸ்டி வசதி ரத்தாகிறது!


    பிரீபெய்டு செல்போன்களுக்கான சர்வதேச அழைப்பு வசதியை ரத்து செய்யுமாறு செல்போன் நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான 10 நாள்களுக்குள் அனைத்து பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் இதுகுறித்து தகவல் தெரிவிக்குமாறு, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்  (டிராய்) கேட்டுக் கொண்டுள்ளது.

 அதன்பிறகு,சர்வதேச அழைப்பு வசதி (ஐஎஸ்டி) வசதி வேண்டும் என்று கோரும் வாடிக்கையாளர்கள் தவிர மற்றவர்களுக்கு ஐஎஸ்டி வசதியை 60 நாள்களுக்குள் ரத்து செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
  சர்வதேச தொலைபேசி எண்ணிலிருந்து பரிசு விழுந்துள்ளதாக அழைப்பு, எஸ்எம்எஸ் வருவதாகவும்,அவர்கள் குறிப்பிடும் எண்ணுக்கு தொடர்புகொள்ளும்போது அதிக கட்டணம் பிடித்தம் செய்வதாகவும் புகார் எழுந்ததால் டிராய் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அங்கன்வாடி மையங்களில் பேபி டாய்லெட் அமைக்க உத்தரவு

அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், அனைத்து அங்கன்வாடிகளிலும், "பேபி டாய்லெட்" அமைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

   தமிழகம் முழுவதும், பல அங்கன்வாடி மையங்கள், போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படுகின்றன. இங்கு விட்டுச் செல்லப்படும் குழந்தைகள், தெரு ஓரங்களில், இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர்.

  பள்ளிகளுடன் இணைந்து செயல்படும், சில அங்கன்வாடி மையங்களில் மட்டும், கழிப்பறைகள் உள்ளன. முறையான பராமரிப்பு இல்லாமல் இவை உள்ளதால், குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படுகிறது.

   எனவே, குழந்தைகளின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன், அனைத்து அங்கன்வாடி மையங்களிலும், குழந்தைகளுக்கென பிரத்யேகமாக, "பேபி டாய்லெட்" அமைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், வரும் நவம்பர் மாதத்துக்குள், கழிப்பறை அமைக்கும் பணிகளை முடிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

   மாவட்டக் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட மேலாளர், மணிமேகலை கூறியதாவது: ஒவ்வொரு கழிப்பறையும், 18 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளன. குழந்தைகள் எளிதில் பயன்படுத்துவதற்கு ஏற்ப, தாழ்வான கதவு; குழந்தைகள், உட்புறமாகக் கதவு பூட்டிக் கொண்டாலும், வெளியில் இருந்து எளிதில் திறக்கும் வகையிலான தாழ்ப்பாள்கள் அமைக்கப்பட உள்ளன.

  கழிப்பறையின் உட்பகுதியில், வண்ண கார்ட்டூன்கள் வரையவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு, மணிமேகலை கூறினார்.

சி.பி.எஸ்.இ பள்ளிகள் கட்டண விவகாரம் - தீர்ப்பு தள்ளிவைப்பு

கல்விக் கட்டணத்தை அரசு நிர்ணயிக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், சென்னை ஐகோர்ட் தள்ளி வைத்துள்ளது.

   சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள் நிர்வாக சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிப்பதை ஒழுங்குபடுத்தும் சட்டமானது, மாநில பாடத் திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளுக்கு தான் பொருந்தும். சி.பி.எஸ்.இ., பள்ளிகள், தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வராது.

   எனவே, கல்விக் கட்டண ஒழுங்குமுறை சட்டமானது, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு பொருந்தாது. அதனால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயிக்க, கல்விக் கட்டண நிர்ணயக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.

   ஆனால், அதிகாரவரம்பை மீறி, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சிலவற்றுக்கு கட்டணத்தை குழு நிர்ணயித்துள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கவோ, அதை அமல்படுத்தவோ தடை விதிக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

   இதுபோன்று, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தரப்பிலும் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தமிழக அரசின் சட்டம், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் பொருந்தும் எனக் கூறி, பெற்றோர் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுக்களை, நீதிபதிகள் பானுமதி, சுப்பையா அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்" விசாரித்தது. பள்ளிகள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.சந்திரன், சோமயாஜி, முத்துகுமாரசாமி, சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சுந்தரேசன், பெற்றோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், அரசு தரப்பில் அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி ஆஜராகினர். 

   அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்த, தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இந்தச் சட்டப் பிரிவுகள் அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும். அந்தப் பள்ளிகள் மாநில பாடத் திட்டத்தை பின்பற்றினாலும் சரி, வேறு எந்த போர்டின் பாடத் திட்டத்தை பின்பற்றினாலும் சரி.

    சி.பி.எஸ்.இ., பள்ளிகளாக இருந்தாலும், அதை துவங்க வேண்டும் என்றால், மாநில அரசின் அனுமதி பெறப்பட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது. இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இவ்வழக்கின் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், "டிவிஷன் பெஞ்ச்" தள்ளிவைத்தது.

Saturday 8 September 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த சட்டப்பூர்வமான உரிமை இல்லை:முன்னாள் எம்.எல்.சி. சி.ஆர்.லட்சுமிகாந்தன்

   ஆசிரியர் நியமனத்திற்காக மட்டும் உருவாக்கப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ஆசிரியர்களை நியமனம் செய்ய தேர்வு செய்யும் உரிமை மட்டுமே உண்டு. தகுதித் தேர்வு நடத்த சட்டப்பூர்வமான உரிமை அதற்கு இல்லை என முன்னாள் மேலவை உறுப்பினர் மற்றும் முன்னாள் மாநில கல்வி ஆலோசனைக்குழு உறுப்பினருமான சி.ஆர்.லட்சுமிகாந்தன் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து கட்டாய இலவசக்கல்வி சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளை மத்திய, மாநில அரசுகள் நடத்துகின்றன. ஆசிரியர்களுக்கு பருவந்தோறும் அல்லது ஆண்டு தோறும் மாறி வரும் பாடத் திட்டத்திற்கேற்ப பயிற்சி வகுப்புகளை நடத்துவதுதான் பலன் தருமே ஒழிய, தகுதித் தேர்வுகளால் நிச்சயம் பலன் ஏற்படாது. மத்தியஅரசு சட்டத்தின்படி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மட்டுமே, ஆசிரியர்களுக்குத் தேர்வு நடத்த முறையான அமைப்பாகும்.  மத்தியஅரசு சட்டத்தின்படி ஆசிரியர் கல்வி நிறுவனமும், மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மட்டுமே உரிமை பெற்றவை.

அடுத்த ஆண்டு அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி மற்றும் எஸ்.எம்.எஸ் முறை...

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் அடுத்த கல்வியாண்டில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை செயலர் சபிதா கூறினார்.
   கோவை பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லூரியில் மண்டல அளவிலான தொடக்கப்பள்ளிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், மண்டல கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.

  தமிழக பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா பேசியதாவது:

ஆண்டுக்கு 4 செட் இலவச சீருடைய வழங்கும் திட்டத்தில் துணியின் தரத்தை ஆய்வு செய்து தரமில்லாதவற்றை திரும்ப ஒப்படைக்கவேண்டும். டிசம்பருக்குள் இலவச சீருடை வழங்கவேண்டும்.

முப்பருவமுறையில், அடுத்த பருவத்திற்கான புத்தகங்கள் விரைவில் வினியோகிக்கவேண்டும்.

இந்தியாவில் முதல் முறையாக கல்வி மேலாண்மை தகவல் திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர்கள் செயல்பாடு, மாணவர்களின் கல்வி கற்கும் திறன் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். பாட புத்தகங்கள் கல்வி விவர திட்டத்தில் குறிப்பிடப்படும். மாணவர் நலன் கருதியே ஆசிரியர் வருகை குறித்து எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி கொண்டு வரப்படும். ஆங்கில வழி கல்வி வந்தால் தனியார் பள்ளியில் இருந்து அதிக மாணவர்கள் அரசு பள்ளிக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பள்ளிக்கு வராத குழந்தைகளை கணக்கெடுத்து அவர்களை பள்ளியில் சேர்க்கவேண்டும். இவ்வாறு சபீதா பேசினார்.கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட 9 பள்ளிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
  இவ்விழாவில் பள்ளி கல்வித்துறை இயக்குநர் தேவராஜ், முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், தொடக்க கல்வி அலுவலர் ராமேஸ்வர முருகன், மாவட்ட கல்வி அலுவலர் பாலமுரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விஷன்-2023 செயல்படுத்தப்படும்.

அமைச்சர் சிவபதி தகவல்

தமிழக பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சிவபதி பேசியதாவது:

எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் பள்ளி கல்வித்துறைக்கு 14,582 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ‘விஷன் 2023’ திட்டத்தில் அனைத்து துறைகளையும் சிறப்பாக முன்னேற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பள்ளி கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கிராம பகுதி மாணவர்களின் பெற்றோர்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக மாணவர்களுக்கு தேவைப்படுகின்ற அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது. பென்சில், ஜியோமெட்ரிக் பாக்ஸ், மேப் இலவசமாக  வழங்கப்பட்டு வருகிறது. இவற்றின் தரத்தை முதல்வர் நேரடியாக ஆய்வு செய்த பின்னரே மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் சிவபதி பேசினார்.

பள்ளிக் கல்வித்துறை குறித்த புதிய இணையதளம் துவக்கம்

தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை குறித்த நிலை, தேர்வு தேர்ச்சி சதவீதம், மாணவ, மாணவியரை பற்றிய விவரம் அடங்கிய, புதிய இணையதளத்தை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.இணையதளம் குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் கூறியதாவது: அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என, அனைத்து வகை பள்ளிகளில் பயிலும், 1.25 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள் குறித்த தகவல்கள் இந்த இணையத்தில் இடம் பெற்றுள்ளன. www.tnschools.gov.in என்பது அந்த இணையதளம்.அனைத்து மாணவ, மாணவியருக்கும், "ஸ்மார்ட் கார்டு" கொடுக்க திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக, முதல்வரின் தொகுதியில், ஐந்து பள்ளிகளை சேர்ந்த மாணவருக்கு, "ஸ்மார்ட் கார்டு" வழங்கப்பட்டுள்ளது. மற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கும், விரைவில் இந்த கார்டு வழங்கப்படும்.மாணவரின் புகைப்படத்துடன், அவர் பயிலும் பள்ளி குறித்த விவரங்கள், இந்த கார்டில் இருக்கும். இந்த கார்டை, "பார் கோடு ரீடர்" முறையிலோ அல்லது, கார்டில் உள்ள குறியீட்டு எண்ணை, இணைய தளத்தில் பதிவு செய்தால், மாணவரைப் பற்றியும், அவரது குடும்பத்தைப் பற்றியும் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். இந்த, ஐ.டி., கார்டு, "டிசி"க்குரிய தகவல்களை உள்ளடக்கியதாக இருக்கும். மேலும், பயிற்சி பெறும் ஆசிரியர், தன் அனுபவம் குறித்த தகவல்களை, இந்த இணைய தளத்தில் பதிவு செய்யலாம். அது குறித்து, மற்ற ஆசிரியர் கருத்துக்களை பறிமாறிக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    வரும் காலங்களில், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை, இந்த இணைய தளம் மூலம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு தேவராஜன் கூறினார். மாநிலத்தின் வரைபடம், மக்கள் தொகை, மொத்தப் பள்ளிகள் எண்ணிக்கை, புதிய மாணவர் சேர்க்கை விவரம், தேர்ச்சி விவரம், மாநிலத்தின் எழுத்தறிவு நிலவரம் உட்பட, 30 தலைப்புகளில், ஏராளமான தகவல்கள் இணையதளத்தில் தரப்பட்டுள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வு: மறுதேர்வு எழுதுவோருக்கு திங்கள் (10.09.2012) முதல் ஹால் டிக்கெட்

ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுதுவோருக்கு வரும் திங்கள்கிழமை (செப்டம்பர் 10) முதல் ஹால் டிக்கெட்டுகள் அனுப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

   இதுதொடர்பாக, அந்த வட்டாரங்கள் மேலும் கூறியது: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான மறுதேர்வு அக்டோபர் 3-ம் தேதி நடைபெறுகிறது. சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஆசிரியர் தகுதித் தேர்வில் வினாத்தாள் மாற்றம் போன்ற தவறுகள் நடைபெற்ற 5 தேர்வு மையங்கள் இந்தமுறை மாற்றப்பட்டுள்ளன. 

  அதேபோல், புதிதாக 10-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 400 முதல் 600 தேர்வர்கள் மட்டுமே இருக்கும் வகையில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மறுதேர்வுக்கான 90 சதவீதப் பணிகள் இப்போது நிறைவடைந்துள்ளன.அரசாணை வெளியீடு: மறுதேர்வு நடைபெறும் அக்டோபர் 3-ம் தேதி புதன்கிழமை ஆகும். அனைத்து ஆசிரியர்களும் இந்தத் தேர்வை எழுதும் வகையில் அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியாகியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

2,895 முதுநிலை ஆசிரியர் விரைவில் பணி நியமனம்

புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள, 2,895 முதுநிலை ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர் என பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உமா தெரிவித்தார்.

   இதுகுறித்து, பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உமா (மேல்நிலைக் கல்வி) கூறியதாவது: தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 900 பணியிடங்களில், 50 சதவீதம், பதவி உயர்வு மூலமும்; 50 சதவீதம் நேரடி பணி நியமனம் மூலமும் நிரப்பப்படுகின்றன.

   அந்த வகையில், பதவி உயர்வுப் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. அவர்களுக்கு, நிதித் துறையின் ஒப்புதல் பெறப்பட்டு, சம்பளம் வழங்கப்பட்டு உள்ளன. எந்த மாவட்டத்திலும் பிரச்னை கிடையாது.

   காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும், ஆறு பள்ளிகளில் சேர்ந்த முதுநிலை ஆசிரியருக்கு, சம்பளம் கிடைக்கவில்லை என, தகவல் வந்துள்ளது. அவர்களுக்கும், ஓரிரு நாளில் சம்பளம் வழங்கப்படும்.புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள, 2,895 முதுநிலை ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இவ்வாறு உமா தெரிவித்தார்

அண்ணாமலைப் பல்கலை - இளநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

வகுப்பறை வழிபாடுகளைகண்காணிக்க அரசு உத்தரவு

மாணவர்களின் தனித்திறனை வளர்க்கும் வகையில், நடத்தப்படும் வகுப்பறை வழிபாடுகளை கண்காணிக்க, கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
    பள்ளிகளில் காலை வகுப்புகள் துவங்குவதற்கு முன், அனைத்து மாணவர்களின் கூட்டு வழிபாடு நடைபெறும். இதில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். இதனால், மாணவர்களின் தனித்திறன் வளர வாய்ப்பில்லை; தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முழுமையாக தெரிவதும் இல்லை, என்ற குறைபாடு உள்ளது.
    இதை போக்கும் வகையில், வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் கூட்டு வழிபாடு நடத்தவும், மற்ற நாட்களில் வகுப்பறை வழிபாடு நடத்தவும், பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டது. இதன்படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஜூலை 7 முதல் வகுப்பறை வழிபாடு நடத்தப்படுகிறது.
     இதில், தினமும் காலையில் ஒவ்வொரு வகுப்பிலும், வகுப்பு ஆசிரியர் தலைமையில், ஐந்து மாணவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தும் வகையில், ஒரு மாணவன் தமிழ்தாய் வாழ்த்து படித்தும், அடுத்த மாணவன் திருக்குறள் படித்தும், மற்ற இரு மாணவர்கள் பழமொழி, நன்னெறி விளக்கம் படித்தும், ஐந்தாவது மாணவன் அன்றைய நாளிதழ் செய்திகளை வாசித்தும் வருகின்றனர்.
     இதே போல், தினமும் வகுப்றை வழிபாடு நடைபெறுகிறதா, என கல்வி அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்ய, பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

செப்.15 முதல் முப்பருவத்தின் இரண்டாம் பருவ கல்வி திட்டப் புத்தகங்கள் வினியோகம்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இரண்டாம் பருவத்திற்கான, 9.50 கோடி பாடப் புத்தகங்கள், 15ம் தேதி முதல் வினியோகிக்கப்படும் என பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் கோபால் தெரிவித்தார்.

   நடப்பு கல்வியாண்டில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, அனைத்து வகை பள்ளிகளிலும், முப்பருவக் கல்வி முறை திட்டம் அமல்படுத்தப் பட்டு உள்ளது. அதன்படி, ஒரு ஆண்டுக்கான பாடத் திட்டம், மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

   முதல் பருவத்திற்கான பாடத் திட்டம், இந்த மாதத்துடன் முடியும் நிலையில், அக்டோபரில் இரண்டாம் பருவம் துவங்குகிறது. அதற்காக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக, 9.50 கோடி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளன. இவை, 15ம் தேதியில் இருந்து, மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்படும் என, பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் கோபால் தெரிவித்தார்.

  அவர், மேலும் கூறியதாவது: மொத்தம், 140 அச்சகங்களில், இரண்டாம் பருவத்திற்கான பாடப் புத்தகங்கள், அச்சடித்து முடிக்கப்பட்டு, மாவட்டங்களில் உள்ள வினியோக மையங்களுக்கு, நேரடியாக அனுப்பப்பட்டு வருகின்றன. 15ம் தேதி முதல், மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்கும் பணிகளை, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்வர்.

   ஒன்று முதல், ஆறாம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள், அதிக பக்கங்களைக் கொண்டதாக இருந்ததால், இரு புத்தகங்களாக பிரித்து வழங்கப்படுகின்றன. குறைந்தபட்சம், 70 பக்கங்களாகவும், அதிகபட்சம், 170 பக்கங்களை கொண்டதாகவும், இந்த புத்தகங்கள் இருக்கும்.

  தனியார் பள்ளி மாணவர்களுக்காக, 30 சதவீத புத்தகங்கள், விற்பனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களை, பாடநூல் கழக கிடங்குகளில் இருந்து, தனியார் பள்ளிகள் பெற்றுக் கொள்ளலாம்.சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பாடநூல் கழக அலுவலக கவுன்டர்களில், 15ம் தேதியில் இருந்து, இரண்டாம் பருவ புத்தகங்கள் விற்பனைக்கு கிடைக்கும். இவ்வாறு, கோபால் தெரிவித்தார்.

Friday 7 September 2012

இன்று அனைத்துலக எழுத்தறிவு நாள் !


கல்விக்கு அடிப்படையாக விளங்குவது எழுத்தறிவு. இது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால்தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும். சமூக மற்றும் மனித முன்னேற்றத்துக்கு இது அவசியம். எனவே எழுத்தறிவு பெறுவது ஒருவரின் கடமை; அவசியம்; கட்டாயம். உலகில் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக செப்.,8ம் தேதி உலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஏதாவது ஒரு மொழியில், புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். மற்றபடி, எழுத்தறிவு பெற்றவராக கருத, குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த அளவும் தீர்மானிக்கப்படவில்லை. 
என்ன பயன்:
எழுத்தறிவு, அடிப்படைக் கல்வியின் இதயமாக உள்ளது. எழுத்தறிவு பெறுவதன் மூலம் வறுமை, குழந்தை திருமணம், மக்கள் தொகை பெருக்கம், வேலைவாய்ப்பின்மை, பாலின வித்தியாசம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை தடுக்க முடியும். எழுத்தறிவு மூலம், அமைதி மற்றும் ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடியும். இது இன, மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். எழுத்தறிவு பெற்ற பெற்றோர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கமாட்டர்.

ஆப்ரிகாவில் குறைவு:
வயது வந்தோரில் 10 கோடி பேர் எழுத்தறிவு அற்றவர்களாக உள்ளனர். உலகில் எழுத்தறிவற்றவர்களில் மூன்றில் 2 பேர் பெண்கள். எழுத்தறிவற்றவர்களில் 98 சதவீதம் பேர் வளரும் நாடுகளில் உள்ளனர். ஆப்ரிகா கண்டத்தில், எழுத்தறிவு சதவீதம் 60க்கும் குறைவு. வளரும் நாடுகளில் 6 வயது முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளில் 15 சதவீதம் பேர் பள்ளி செல்லவில்லை என யுனெஸ்கோ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் நிலை:
2011 சென்சஸ் கணக்கின் படி, இந்தியாவின் எழுத்தறிவு, 74 சதவீதமாக உள்ளது. இதில் ஆண்கள் 82.14 சதவீதம், பெண்கள் 65.46 சதவீதம். இது 2001ம் ஆண்டு கணக்கெடுப்பை விட 9.2 சதவீதம் அதிகம். தமிழக எழுத்தறிவு சதவீதம், 80.4 சதவீதமாக உள்ளது. இது 2001ம் ஆண்டு கணக்கெடுப்பை விட 6.9 சதவீதம் அதிகம். எழுத்தறிவில் கேரளா முதலிடத்திலும், பீகார் கடைசி இடத்திலும் உள்ளது. நாட்டில் எழுத்தறிவு சதவீதம் ஓரளவுக்கு அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.

Thursday 6 September 2012

மாணவர்களை பிள்ளைகளாக பாவியுங்கள்: பள்ளிக்கல்வி அமைச்சர்

மாணவர்களை தங்களின் பிள்ளைகளாக ஆசிரியர்கள் எண்ண வேண்டும் என்று அமைச்சர் சிவபதி பேசினார். தொடக்கக் கல்வி, பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றிய, 370 ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கினார்.

   பள்ளிக்கல்வித் துறை சார்பில், முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி, சிறப்பாக பணியாற்றிய, 370 ஆசிரியர்களுக்கு, தமிழக அரசின், "ராதாகிருஷ்ணன் விருது" வழங்கும் விழா, சென்னையில் நடந்தது. துறை முதன்மைச் செயலர் சபிதா தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் வரவேற்றார்.

     ஆசிரியர்களுக்கு, "ராதாகிருஷ்ணன் விருது" வழங்கி, அமைச்சர் சிவபதி பேசியதாவது: நானும் ஒரு ஆசிரியர் குடும்பத்தைச் சேர்ந்தவன் தான். அந்த வகையில் எனக்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவியை வழங்கிய, முதல்வருக்கு நன்றி கூறுகிறேன். விருது பெற்ற ஆசிரியர் அனைவருமே, வயது முதிர்ந்தவர்களாக, 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்தவர்களாக இருக்கிறீர்கள். உங்களது திறமையையும், உழைப்பையும் கவுரவிக்கும் வகையில், இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 

    பள்ளிக்கல்வித் துறையின் மீது, முதல்வர் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். எப்போதும் இல்லாத அளவிற்கு, இத்துறையில், முதல்வர் மாபெரும் புரட்சியை செய்துள்ளார். மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள், புத்தகம், நோட்டுகள், காலணி, பென்சில் என, அனைத்தையும் வழங்கியுள்ளார். கல்வியை மட்டும் போதிக்காமல், அதனுடன், வாழ்க்கையையும், வாழ்வியல் தத்துவத்தையும், ஆசிரியர் கற்றுத்தர வேண்டும்.

   ஒரே ஒரு வேண்டுகோளை மட்டும், ஆசிரியருக்கு விடுக்கிறேன். மாணவ, மாணவியரை, தங்கள் பிள்ளைகளாக பாவிக்க வேண்டும். அதேபோல், ஆசிரியர் கண்டித்தாலும், அது நல்லதற்குத்தான் என, மாணவர் எண்ண வேண்டும். ஆசிரியரை, பெற்றோராக கருதி, மாணவ, மாணவியர் செயல்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் சிவபதி பேசினார்.

IMPLEMENTATION OF CCE SYSTEM

தனியார் பள்ளிகள் தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டத்தின் விதி 12 மற்றும் 13 நடைமுறைபடுத்துதல் சார்ந்த - தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

தனியார் பள்ளி பணி நியமனம் - RTI - மூலம் பெறப்பட்ட தகவல்

இனச்சுழற்சி அரசாணை

Tuesday 4 September 2012

பாரதிதாசன் பல்கலைக்கழகம் பி .எட் மே 2012 தேர்வு முடிவுகள் வெளியீடு !.

CCE - 1st Term Blue Print & Model Question Papers

மாணவ சமுதாயத்தின் சிறப்பான வாழ்விற்கு அல்லும் பகலும் உழைத்திடும் ஆசிரியர் பெருமக்களுக்கு எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் கூறியுள்ளார்.

தமிழகத்தில் பிறந்து ஆசிரியராகப் பணி புரிந்து, தமது நற்சிந்தனையாலும்,நல்லொழுக்கத்தினாலும் மிக உயர்ந்து நாட்டின் உயரிய பதவியாகிய குடியரசுத் தலைவர் பதவியினை வகித்து, ஆசிரியப் பணிக்கு பெருமை தேடித் தந்த டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களுடைய பிறந்த நாளை ஆசிரியர் தினமாகஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாள் அனைவரும் கொண்டாடி மகிழ்ச்சி அடைகிறோம்.கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவைஎன்கிற வள்ளுவர் வாக்கின்படி ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். நாட்டில் அறியாமையையும், வறுமையையும் ஒழிக்கக் கூடிய ஒரு கருவி உண்டு என்றால் அது தான் கல்வி. அந்தக் கல்விச் செல்வத்தை மாணவர்களுக்கு வழங்கும் பெருமையினைப் பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள் என்றால் அது மிகையாகாது. பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக தம்மிடம் பயிலும் மாணவக் கண்மணிகளிடம் அன்பு காட்டி அரவணைத்து வழிகாட்டுவதன் மூலமே அவர்கள் சிறந்த கல்வியைப் பெற்று சமுதாய வளர்ச்சிக்கு உதவிட முடியும் என்பதை அறிந்த டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் அதன்படி செயல்பட்டு,ஆசிரியர் தொழிலுக்கு மிகப் பெரிய பெருமையைத் தேடித் தந்தார். அப்பெருமகனார் காட்டிய வழியில் ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் நல்ல குறிக்கோள்களையும், சமுதாய உணர்வுகளையும் மாணவச்செல்வங்களுக்கு விதைத்து சிறந்த கல்விப் பணியாற்றிட வேண்டும் என்பதே எனது பேரவா. மாணவச் சமுதாயம் கல்வி, கேள்வியில் சிறந்து விளங்கி பார் போற்றிட வாழ உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு செயல்படுத்துகின்ற எண்ணற்ற திட்டங்களைச் செம்மையான முறையில் பயன்படுத்தி சிறந்த மாணவச் செல்வங்களை உருவாக்க வேண்டியது ஆசிரியப் பெருமக்களின் தலையாய கடமையாகும். மாணவ சமுதாயத்தின் சிறப்பான வாழ்விற்கு அல்லும் பகலும் உழைத்திடும் ஆசிரியர் பெருமக்களுக்கு எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் கூறியுள்ளார்.